அ.மார்க்ஸால் நான் உருப்படாமல் போனேனா ? ஜெயமோகனின் குரூரjeyamohan.in/?p=59 கற்பனை. அ.மாவோடு உள்ள உறவையொன்றும் இக்கட்டுரைகளால் குலைத்துவிட முடியாது.
(தமிழ் மரபில் நெய்தல் என்று ஒரு திணை இருந்தாலும் அதில் வரும்பாடல்களை எழுதியவர்களில் பரதவகுலத்தவர் அனேகமாக எவரும் இல்லை. பெயர்களை வைத்துப் பார்த்தால் வேளாளார்[ கிழார்] தான் அதிகமாக எழுதியிருக்கிறார்கள். ஆகவே பெருமணல் நிலம் என்ற அளவிலேயே நெய்தல் நின்றுவிட்டது— கடல் மிக அபூர்வமாகவே பேசப்பட்டது. இன்றுவரை கடல் குறித்து எழுதியவர்கள் எவருமே பரதவர் அல்ல. தோப்பில் முகமது மீரான் கடற்கரை வாழ்க்கையை உயிருடன் சித்தரித்துள்ளார், அவருக்குக் கடல் தெரியாது.
ஆனால் ஓர் இளம் எழுத்தாளர் கடலை எழுதியிருக்கக் கூடும். ‘ குரூஸ் சாக்ரடாஸ் ‘ . துரதிருஷ்ட வசமாக அவர் அ. மார்க்ஸ் என்ற இலக்கியத்துக்கு எதிரான சக்தியின் கைகளில் சென்று சேர்ந்தார். அ.மார்க்ஸ் அன்று அத்தகைய ஒரு பரபரப்பபைப் பெற்றிருந்தமை துரதிருஷ்டவசமானதே . எண்பதுகளில் பிரபலமாக இருந்த கட்டுடைப்பு வசைபாடல்தான் இலக்கியம் என்ற செய்தியை அ.மார்க்ஸ் அவரது தலைக்குள் செலுத்த குரூஸ் சாக்ரடாஸ் அவரால் மட்டுமே எழுதச் சாத்தியமான– இரண்டாயிரம் வருடமாக எழுதப்படாத— மக்களின் வரலாற்றை எழுதுவதை விடுத்து அ மார்க்ஸ் அப்போது கூவிக்கொண்டிருந்த கடன்பெற்ற கோஷங்களை மென்று துப்ப ஆரம்பித்தார். சித்தியைப் புணர்தல் போன்ற அதிர்ச்சிக் கருக்கள் , உடைத்து சிதிலமாக்கிய செயற்கையான கதைநடை, கட்டுடைத்தல் பிரதி என்றெல்லாம் அபத்தமாக அன்றைய பரபரப்புப் போக்கை தானும் பரிசோதனை செய்து கவனம் பெறாமல் மறைந்தார். அவரது சாத்தியங்களைச்சொல்லும் ஒரே ஒருகதை– கடல் உடைந்து திசை தவறி பதினைந்துநாள் கழித்து மீளும் அனுபவத்தை சித்தரிக்கும் கதை – இன்று அவரது நினைவாக நிற்கிறது. குரூஸ் சாக்ரடாஸ் மீள்வாரென்றால் அது தமிழுக்கு ஒரு கொடையாக அமையலாம்.)

உரையாடல்
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.